"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

இன்ஷாஅல்லாஹ்! தடையை தகர்த்து - பொதுக்கூட்டம்

                        தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கையை வீரியமாகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் மக்கள் மத்தியில் எடுத்துறைத்து சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் பல தடைகளை தகர்த்து  எடுத்துவைப்பதை நாம் அறிவோம்.

நமது திருவாரூர் மாவட்டமும் இதற்கு விதிவிளக்கல்ல. நமது மாவட்டத்தின் பல பகுதிகளில் அடக்குமுறைக்கு எதிராக குறல் கொடுத்து ஏகத்துவத்தை நிலைநிறுத்தி வருகிறது நமது ஜமாஅத்.

திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம் கிளையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 9-6-2013 அன்று வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடத்த கிளையின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையில் அனுமதி கடிதம் கடந்த 21-5-2013 அன்று கொடுக்கப்பட்டது.

காவல்துறை கடந்த 23-5-2013 அன்று இடத்தை ஆய்வு செய்து பின்னர் கொல்லாபுரம், ரைஸ்மில் தெரு அருகில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் ஊர் ஜமாஅத் சார்பாக வரதட்சனை ஒழிப்புபொதுக்கூட்டத்திற்கு எதிர்பு எழுந்துள்ளதாக கூறி கடந்த 30-5-2013 அன்று மீண்டும் காவல்துறை நமது ஜமாஅத் சகோதரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுன்னத்தை(நபி வழியை) பின்பற்றாத சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரித்துள்ளனர். மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்களும் இதில் கலந்துகொண்டு நமது ஜமாஅத் சார்பாக முழு பொறுப்பையும் ஏற்க்கும் என தெரிவித்தும் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

பின்னர், இது குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் 3-6-2013 , இன்று மாலை 4.20 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் வட்டாட்சியர் அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார்.

மாற்றுமதத்தினர் பிரச்சனை எழுப்புவர்கள் என்றும் சட்ட ஒழுங்கு கெடும்  என்று கூறி பொதுக்கூட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஊர் ஜமாஅத் முனைப்புடன் உள்ளது.

 இந்திய அரசியல் சட்டப்படி கடும் தண்டனைகள் வழங்கப்படும் வரதட்சனை கொடுமையை ஒழித்து பல பகுதிகளில் நபி (வழி) அடிப்படையில் வரதட்சனையில்லா திருமணங்களை நடத்திவருகிறது நமது தவ்ஹீத் ஜமாஅத். (அல்ஹம்துலில்லாஹ்.)


சமரச பேச்சுவார்த்தையின் இறுதியில்..

சட்டம் ஒழுங்கு  கெடும்  என்பதால் பொது இடத்தில் அனுமதி மறுக்கபட்டு மர்கஸில் நடத்த அனுமதி அளிப்பதாகவும்,

மர்கஸில் (நூலம்) இடத்தில் நடத்தினால் இடவசதி பற்றா குறை ஏற்ப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுத்துவிட்டதால், அங்கும் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும்.

தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் ஆகியோர்கள் இப்பிரச்சனை முடியும் வரை ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது எனவும் தெரிவித்து கையெழுத்திட கோரிய வட்டாட்சியரின் மனுவை புறக்கணித்து வெளியேறியது நமது ஜமாஅத்.

இன்ஷா அல்லாஹ், இது தொடர்பாக கிளை சார்பாக மாவட்ட கவணத்திற்கு கொண்டுவரப்பட்டு மாநில ஆலோசனைகளின் படி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொல்லாபுரத்திலும் ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் பணியில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் உள்ளது.
இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்ச்சியில் நமது மாவட்ட கிளைகளில் இருந்து அதிகமான மக்களை அழைத்துவந்து ஏகத்துவத்தை கொல்லாபுரத்தில் நிலைநிறுத்த அழைக்கிறோம்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு என்பதை காவல்துறை மறந்துவிட வேண்டாம். சட்டத்தை பாதுகாக்கும் கடமையுள்ள காவல்துறையும் மற்றும் அரசு துறைகள் வரதட்சனைக்கு எதிராக குறல் கொடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்குமா? அனைவருக்கும் பொதுவான சட்டம் என நிறுப்பிக்குமா?

பல அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை இப்பொது இந்த கூட்டத்தை மட்டும் மறுக்கும் காரணம் என்ன? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

--

ஜஷாகல்லாஹ்...

Webmaster,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், - கொல்லாபுரம் கிளை
திருவாரூர் மாவட்டம்.

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.