"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

பிறை_பார்க்க_வேண்டிய_சந்தேகத்திற்குரிய_நாள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

#இன்று_26_05_2017_பிறை_பார்க்க_வேண்டிய_சந்தேகத்திற்குரிய_நாள்

#பிறை_பார்ப்பீர் !!!

நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்;

(மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்;

உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

- இப்னு உமர் (ரலி) 
- ஸஹீஹ் முஸ்லிம் 1958

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.