"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

சூனியம் குறித்த ஒப்பந்தம்


அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று TNTJ.மாநில தலைமை யில்  நடந்த சூனியம் குறித்த  ஒப்பந்தம் ...

144 நாட்கள் கெடு ...

TNTJ மாநில நிர்வாகிகள் 5பேருக்கு சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்து
வாராம் ....

சூனியக்காரர் திருப்பூர் தீனுடன் அடுத்த சூனிய ஒப்பந்தம்!
- ஓர் அலசல்!
(தினம் ஒரு தகவல் 20.08.14)

உரை : எம்.எஸ். சையது இப்ராஹீம்

கையெழுத்தான ஒப்பந்த விபரம் :

20.08.14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமயகத்தில் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் அவர்களுக்கும் டிஎன்டிஜேவிற்கு இடையே நடைபெற்ற சூனியம் குறித்த ஒப்பந்தத்தின் விபரம் :

நாளை 21.08.14 வியாழக்கிழமை முதல் சரியாக 144 நாட்களுக்குள் (மூன்று மண்டலங்களுக்குள், அதாவது 1மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும்) வரக்கூடிய 2015 ஜனவரி 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொறுப்பில் உள்ள கீழ்க்கண்ட ஐந்து நபர்களுக்கு கீழ்க்குறிப்பிட்ட பாதிப்புகளை சூனியத்தின் மூலம் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்

பீ.ஜைனுல் ஆபிதீன் சூனியத்தின் மூலம் ஊமையாக்கப்படுவார் என்றும்,

எம்.எஸ்.சையது இப்ராஹீம் சூனியத்தின் மூலம் இரண்டு கண்களும் குருடாக ஆக்கப்படுவார் என்றும்,

கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் சூனியத்தின் மூலம் கோமா நிலைக்கு ஆளாக்கப்படுவார் என்றும்,

எம்.ஐ.சுலைமான் சூனியத்தின் மூலம் புத்தி சுவாதீனமின்றி ஆடையின்றி அலையச் செய்யப்படுவார் என்றும்,

எஸ்.கலீல் ரசூல் சூனியத்தின் மூலம் இடது கை மற்றும் கால் செயலிழந்து முடமாக்கப்படுவார் என்றும் அத்லு எஸ்.கே.தீன் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்பந்தம் செய்கிறார்.

மேற்குறிப்பிட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று குறிக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதுவும் ஏற்பட்டால் அது சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.

மேற்குறிப்பிட்டுள்ள விளைவுகள் விபத்து, தாக்குதல் போன்றவற்றால் ஏற்பட்டால் அதுவும் சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.

சூனியம் செய்வதற்குத் தேவையான பொருட்களும், (வேர்வைபட்ட உள்ளாடை, முடி, நகம், சிறுநீர், ) கேட்டுக்கொண்ட விபரங்களும் (பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, அலை பேசி எண்) அத்லு எஸ்.கே.தீனிடம் வழங்கப்பட்டது.



2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சென்னையில் அமைக்கபடும் மேடையில் அத்லு எஸ்.கே.தீனும் மேற்கண்ட ஐவரும் தோன்றுவர். அப்போது

1.பீ.ஜைனுல் ஆபிதீன் சலாம் கூட சொல்ல முடியாது.

2.எம்.எஸ்.சையது இப்ராஹீம் – இரண்டு கண்களும் தெரியாத குருடராக இருப்பார்.

3.கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோமா நிலையில் ஸ்ட்ரக்சரில் தூக்கிவரப்படுவார்.

4.எம்.ஐ.சுலைமான் ஆடையின்றி நிர்வாணமாக புத்தி சுவாதீனமில்லாதவராக அழைத்து வரப்படுவார். (மற்றவர்கள் அவருக்கு ஆடை போர்த்தி அழைத்து வருவர்.)

5. எஸ்.கலீல் ரசூல் இடது கை, கால் முடமாகி அழைத்து வரப்படுவார்.

அன்றைய தினம் மேற்குறிப்பிட்ட ஐவருக்கும் குறிப்பிட்ட பாதிப்பு சூனியத்தால் ஏற்படுத்தப்பட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்லு எஸ்.கே.தீனுக்கு அதே மேடையில் ரூபாய் 50 லட்சம் வழங்கும்.

அன்றைய தினம் மேற்கண்ட ஐந்து நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட வகையிலான பாதிப்புகள் ஏற்படாவிட்டால் சூனியம் என்பது பொய் என்பதை அத்லு எஸ்.கே.தீன் ஒப்புக்கொண்டு அதே மேடையில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து தவ்பா செய்து கலிமா சொல்லி சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பாரும் முழுமனதோடும், புத்தி சுவாதீனத்தோடும் எவ்வித நிர்பந்தமுமின்றி எழுதிக்கொண்ட ஒப்பந்தமாகும்.

சூனிய (வித்தை) க் காரர்கள்
வெற்றி பெறவே மாட்டார்கள்" (உலக பொதுமறை -
திருக்குர்ஆன் 10:77)
இன்ஷா அல்லாஹ்! சத்தியம் வெல்லும்!!
அசத்தியம் அழிந்தே தீரும்.

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.