"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

அன்புச் சகோதரிகளே....!

அன்புச் சகோதரிகளே....!

நீங்கள் கல்லூரியில் படிப்பவராக இருந்தாலோ....

அல்லது

தோழிகள் வீட்டிற்கு சென்றாலோ....

அல்லது...

ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ...

அதிகம் கவனமாக இருங்கள்...

குரூப் போட்டோவை தவிர்த்துக் கொள்ளுங்கள்...!

உங்களை அறியாமல் எடுக்கப்பட்ட... போட்டோ....
முகநூலில்
உங்கள் தோழிகளால் பரப்பப் படுகிறது...!

கல்லூரியில்...அல்லது ஏதாவது நிகழ்ச்சியில்.... நீங்கள் சாதாரண உடை (ஹிஜாப்) அணிந்து எடுத்த போட்டோ....

(தோழிதானே... உறவுக்காரர்கள்தானே.. என்று அவர்களுடன் நீங்கள் சாதாரணமான உடையில் எடுத்த போட்டோக்கள்...
முகநூலில் வலம் வருகிறது...)

என்றோ...
எடுக்கப்பட்ட போட்டோக்கள்...

இன்று... நீங்கள் கண்ணியமாக வாழும்போது....

உலகுக்கு அம்பலமானால்...?

உங்கள் கணவரின் பார்வைக்கு பட்டால்...?

உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பட்டால்...?

உங்கள் உறவுக்காரர்களின் பார்வையில் பட்டால்...?

உங்கள் அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் பார்வையில் பட்டால்...?

எவ்வளவு துடித்துப் போவீர்கள்...?

அதுமட்டுமல்ல...
எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்...?

ஆகவே கவனமாக செயல்படுங்கள்...

அறைலூசுகள் முகநூலின் அபாயத்தை விளங்காமல் செய்யும் தவறுகளுக்கு

சம்பந்தமே இல்லாத நீங்கள் பலியாக நேரிடும் ...!!

கவனம்..! கவனம்...!

அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக..!

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.