"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

2013 ஆண்டு புனித ஹஜ் பயணம் - தமிழ் நாடு ஹஜ் குழு

     இன்ஷாஅல்லாஹ்! 
இந்த ஆண்டு ஹஜ் செல்ல விரும்புபவர்கள் மார்ச் 20 க்குள் (20.03.2013) விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இந்த ஆண்டு 2013 ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் விண்ணப்ப படிவங்களை எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது இதற்கான விண்ணப்பத்தை www.hajcommittee.com என்ற இணையlaதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மனுதாரர்கள் வரும் மார்ச் 20ம் (20.03.2013) தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
 
The last date for submission of of Hajj application is 20th March 2013.

For more details pls visit http://www.hajcommittee.com/


எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.