"உண்மை வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது . பொய் அழியக் கூடியதாகவே உள்ளது " என்றும் கூறுவீராக ! (திருக்குர்ஆன் 17:81)

Youtube

ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொல்லாபுரம் கிளை நிர்வாகத்தின் சார்பாக;
இந்த தியாகத் திருநாளில் ஏகத்துவ சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்
நோய்நொடி இல்லாத வாழ்க்கையும் இறைவனின் அபிவிருத்தியும் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று இந்தத் தியாகத் திருநாளில் நம்முடைய வாழ்க்கை இஸ்லாத்திற்காக அர்ப்பணிக்க கூடிய வாழ்க்கையாகவும்
மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்லக்கூடிய வெற்றி பெறக் கூடிய மக்களாகவும் நம் அனைவரையும் ஏக வல்லமை பொருந்திய அல்லாஹ் அருள்புரிவானாக என்று உங்களுக்காக பிரார்த்திக்கின்றோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை

பெருநாள் தொழுகை உரை

https://fb.watch/v/f30q2l1us/

*நோன்பு திறக்க ஏற்பாடு*

*நோன்பு திறக்க ஏற்பாடு*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் 20/07/2021 இன்று அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை

My Masjid Community

https://apps.apple.com/in/app/my-masjid-community/id1452575134

பெருநாள் தொழுகை அறிவிப்பு!

இன்ஷா அல்லாஹ் வரும் 20.07.2021 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு மற்றும் பெருநாள் தொழுகை (21.07.21) புதன் கிழமை காலை சரியாக 6:30 மணிக்கு மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்படிக்கு,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கொல்லாபுரம்.

அரஃபா நோன்பு இஃப்தார்

https://youtu.be/Ui9b_gkzGkg
https://www.facebook.com/156319654451148/posts/4174473015969105/?d=n

எங்களை பற்றி

எனது புகைப்படம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), மனிதனை மனிதனாக வாழ கற்று கொடுத்த இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து , இறைவனிடம் அங்கிகரிக்கப்பட்ட ஒரே மார்கமான இஸ்லாத்தை பற்றிபிடித்து ஏகத்துவ கொள்கையை நெஞ்சினில் ஏற்றி ஏகத்துவ பிரச்சாரத்தினை தமிழகத்தில் தொடங்கிய போதே அதன் தாக்கம் எதிரொலித்த மற்றும் ஏகத்துவப்பிரச்சாரதிர்காக அதிக இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்த ஊர்களில் கொல்லாபுரமும் ஒன்று, ஊரின் ஜமாத்தார்களின் முழுக்கட்டுப்பாட்டின் காரணமாக ஏகத்துவ அமைப்புகளுக்கு முறையான எந்த கிளையும் அமைக்க முடியாத பலகீனத்தால் தனிநபர்களாக ஏகதுவச் சிந்தனையை மனதில் ஏற்று செயல்பட்டு வந்தனர், வளைகுடா நாடுகளின் தொடர்பு ஏற்பட்ட பின் பல சகோதரர்கள் ஏகத்துவச்சிந்தனையால் கவரப்பட்டனர் மற்றும் ஊடகத்தின் வாயிலாக ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கப்பட்டவுடன் அதன் தாக்கத்தால் மேலும் பலர் ஏகத்துவ சிந்தனையின் பக்கம் ஈர்க்கப்படனர். அல்லாஹுவின் கிருபையால் நீண்ட காலத்திற்கு பிறகு 2008 ஆண்டு புதிய மர்க்கஸ் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை இறையருளால் பல்வேறு மார்க்க பணிகள் நடைபெற்று வருகிறது, அல்ஹம்துலில்லாஹ் . மர்க்கஸில் ஐந்து வேளை தொழுகை, ஜும்மா உரை & தொழுகை , வாரந்தோறும் பெண்களுக்கு பயான், மாணவர் தர்பியா, பெருநாள் நிகழ்ச்சிகள், மருத்துவ உதவிகள் வழங்குதல் போன்ற சமுதாய பணிகள் நடைபெற்று வருகிறது.